மும்பை: ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் கூறியது: எவ்வாறு அழகாக தெரிய வேண்டும் என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. ஆனால் இந்த ஆலோசனையை இளம்பெண்கள் ஏற்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ‘உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எதையும் செய்’ என்பதில் நான் பெரிய அளவில் நம்பிக்கை கொண்டவள்.
அனைத்து விஷயத்திலும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். நான் மிகவும் புத்திசாலி, பழமைவாதி, மேலும் நான் செய்வது சரியானது என்று நினைப்பவள். எனக்கு உடலமைப்பில் சில பிரச்னை இருந்தது. இது எனக்கு மிகவும் மோசமான கவலையாக இருந்தது, ஏனென்றால் என் டீனேஜ் பருவத்தில் சமூக ஊடகங்களில் இது பெரிதாக விவாதிக்கப்பட்டது. எனவே தான் அறுவை சிகிச்சை செய்தேன்’’ என்று தெரிவித்தார். ஜான்வி கபூர் தனது உதட்டை சரி செய்ய buffalo-plasty எனப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என அவரே தெரிவித்திருக்கிறார்.
