சென்னை: லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. தி.கிட்டு இயக்கியுள்ள இந்த படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் கதையின் நாயகனாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா நாயகியாக நடித்திருக்கிறார். இன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது தமிழகமெங்கும் பெய்துவரும் தொடர்மழை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
