Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நட்டி நடிக்கும் போலீஸ் கதை

ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரித்துள்ள படம், ‘ரைட்’. சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் நட்டி, அருண் பாண்டியன், அக்‌ஷரா ரெட்டி, வினோதினி வைத்தியநாதன், மூணார் ரமேஷ், தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், ரோஷன் உதயகுமார் நடித்துள்ளனர். அஜித் குமாரின் ‘வீரம்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த யுவினா பார்தவி, இதில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார்.

நடிகை அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் முக்கிய வேடத்தில் அறிமுகமாகிறார். எம்.பத்மேஷ் ஒளிப்பதிவு செய்ய, குணா பாலசுப்ரமணியன் இசை அமைத்துள்ளார். நாகூரான் ராமச்சந்திரன் எடிட்டிங் செய்ய, தாமு அரங்கம் அமைத்துள்ளார். மிராக்கிள் மைக்கேல் சண்டைப் பயிற்சி அளிக்க, ராதிகா நடனக் காட்சி அமைத்துள்ளார்.

படம் குறித்து நட்டி கூறுகையில், ‘எளிய மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்து உதவி கேட்பார்கள். ஆனால், அந்த காவல் நிலையத்துக்கே பிரச்னை என்றால் என்ன நடக்கும்? இதுதான் கதை. ‘ஜில்லா’, ‘புலி’ ஆகிய படங்களில் அசோசியேட்டாக பணியாற்றிய சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதிக்கு நன்றி’ என்றார்.