Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அரசியல் கேள்வியால் அலறிய காஜல்

ஒருகாலத்தில் பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், திருமணமாகி ஒரு மகனுக்கு தாயான பிறகு சில தோல்விப் படங்களை அளித்ததன் மூலம் மார்க்கெட் இழந்த நடிகையாகி விட்டார். தமிழில் அவர் கடைசியாக நடித்திருந்த ‘இந்தியன் 2’ என்ற கமல்ஹாசனின் படத்தில், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறவில்லை. ‘இந்தியன்’ 3வது பாகத்துக்கான லீடில் இடம்பெற்றதை வைத்து, அவருக்கு 3வது பாகத்தில் இயக்குனர் ஷங்கர் அதிக முக்கியத்துவம் தருவார் என்று நம்பப்படுகிறது. இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான ‘சிக்கந்தர்’ என்ற படத்திலும், தெலுங்கில் ‘கண்ணப்பா’ என்ற படத்திலும் காஜல் அகர்வால் நடித்தார்.

அப்படங்களும் அவரது நம்பிக்கையை நாசமாக்கிவிட்டது. தற்போது 2 பாகங்கள் கொண்ட ‘ராமாயணா’ என்ற பன்மொழி படத்தில் நடித்து வரும் அவர், சமீபத்தில் சென்னையில் அளித்த பேட்டியில், ‘அரசியல் தொடர்பான கேள்விக்கு கருத்து சொல்ல மாட்டேன். அது வேறொரு களம்’ என்றார். தமிழில் அதிகமாக நடிக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘விரைவில் நடிப்பேன். அதற்காக சில கதைகளை கேட்டிருக்கிறேன்.

கோலிவுட்டுக்கும், பாலிவுட்டுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. இரு துறைகளும் மிகவும் கிரியேட்டிவாகவும், தொழில்முறையாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. நான் தென்னிந்தியாவில் இருந்து எனது திரைப்பயணத்தை தொடங்கியதாலோ என்னவோ, கோலிவுட் என் மனதில் ஸ்பெஷலான ஒரு இடத்தில் இருக்கிறது. சமீபத்தில் எனது உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியானது. அதுபோன்ற வதந்திகளில் எப்போதுமே நான் கவனம் செலுத்துவது இல்லை’ என்றார்.