சென்னை: நடிகரும், சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் தனது தாயார் பெயரில் ஏழைகளுக்காக அன்னதான விருந்தை தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கங்களில், ‘‘என் அம்மாவின் பெயரில் என் மனதுக்கு நெருக்கமான ‘கண்மணி அன்னதான விருந்து’ இன்று தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள் எளியவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. அந்தப் பிம்பத்தை உடைத்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கண்மணி அன்னதான விருந்தின் நோக்கம். அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்தப் பயணத்தை மனநிறைவுடன் தொடர்வேன்’’ என்று லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.