Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாப் பாடகருடன் பாகுபலி நடிகை டேட்டிங்

மும்பை: அமெரிக்க பாப் பாடகருடன், நடிகை நோரா ஃபதேஹி டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படுவதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகுபலி 1, தோழா படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆடியவர் நோரா ஃபதேஹி. அமெரிக்க இசை விருது விழா சமீபத்தில் நியூயார்கில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் நோரா ஃபதேஹி கலந்து கொண்டார். பிறகு அவர் அமெரிக்க பாப் பாடகர் பென்சன் பூன் உடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இது ரசிகர்களிடையே அவர்களுக்கு இடையே காதல் தொடங்கியிருக்கலாம் என்ற கிசு கிசுக்களை உருவாக்கியது. விழாவில் அவர்கள் ஒருவரையொருவர் நெருக்கமாகப் பேசுவதும், சிரித்து பார்வைகளைப் பரிமாறுவதும் காணப்பட்டது. இருந்தாலும் அவர்கள் அவர்கள் இருவரும் தங்களுக்கு இடையிலான டேட்டிங் குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை.