சென்னை: மலையாளம் மற்றும் தமிழில் ஏராளமான படங்களில் நடித்து இருக்கும் மகிமா நம்பியார் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடந்த சில நாட்க ளாக எனது பெயரில் தவறான மற்றும் ஆபாசமான கருத்துகளுடன் கூடிய போட்டோக்களையும், வீடியோக்களையும் சிலர் பரப்பி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை உடனே நிறுத்த வேண்டும்.
இல்லை என்றால், கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும். இதுபோன்ற அவதூறு பிரசாரத்தால் மன அமைதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. இது எனது கடைசி எச்சரிக்கை’ என்று தெரிவித்து உள்ளார்.