Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரியங்கா சோப்ராவின் ரூ.1.85 லட்சம் உடை

லண்டன்: பிரியங்கா சோப்ரா அணியும் உடைகள், நகைகள் காரணமாக அவரது புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், அவர் அணிந்து வந்திருந்த உடை இப்போது பேசுபொருளாகியுள்ளது. மற்ற டென்னிஸ் போட்டிகள் போன்று அல்லாமல் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் வெள்ளை நிற உடை அணிந்து விளையாடுவது பாரம்பரியமாகும். பிரியங்கா சோப்ராவும் இதேபோன்று வெள்ளை நிற உடை அணிந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிரியாங்காவின் உடை பேசுபொருளானதற்கு முக்கிய காரணம் அதன் விலை. அதாவது பிரியாங்கா அணிந்திருந்த உடையின் விலை ரூ.1,84,540 என்று தகவல்கள் கூறுகின்றன. Eldred Cotton Pique Day Dress என்று அழைக்கப்படும் இந்த உடையை பிரபல வடிவமைப்பாளரான ரால்ப் லாரன் வடிவமைப்பு செய்துள்ளார். பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் உடையையும் ரால்ப் லாரன் தான் வடிவமைத்து இருந்தார். பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஆடை கழுத்தில் காலரும், கை இல்லாத வடிவமைப்பிலும் இருந்தது. பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரவி வருகின்றன.