Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரியங்கா திரிவேதியின் மொபைல் ஹேக் செய்தவர் கைது

பெங்களூரு: கன்னட நடிகர் நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான பிரியங்கா திரிவேதி ஆகியோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டதில், சுமார் ரூ.1.5 லட்சம் இழப்பீடு ஏற்பட்ட சைபர் குற்ற சம்பவம் தொடர்பாக, பீகார் மாநிலத்தை சேர்ந்த விகாஸ் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் பிரியங்கா திரிவேதி ஆன்லைனில் சில பொருட்கள் ஆர்டர் செய்த பிறகு வந்த ஒரு சந்தேகத்திற்குரிய லிங்க்கை கிளிக் செய்ததால், அவரது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. தொடர்ந்து உபேந்திராவின் மொபைலும் ஹேக் செய்யப்பட்டது. ஹேக்கர்கள் அவர்களது தொடர்புகளுக்கு அவசரமாக பணம் கேட்டு செய்திகளை அனுப்பியுள்ளனர். பலர் இதை உண்மை என்று நம்பி பணம் அனுப்பியுள்ளனர். அவர்களது மகனும் ரூ.50 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். இதுபோல் ரூ.1.5 லட்சம் வரை பலரும் அனுப்பியுள்ளனர்.

பல பரிவர்த்தனைகளுக்கு பிறகே மோசடியை உணர்ந்த குடும்பத்தினர், சதாசிவன் நகர் போலீசில் புகார் அளித்தனர். சைபர் தடயங்களை கொண்டு பீகாரை சேர்ந்த விகாஸ் குமாரை போலீசார் கைது செய்து பெங்களூருவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.