Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரியங்கா மோகன் புகார்: எனக்கு எதிராக பணம் கொடுத்து மீம்ஸ் போடுகிறார்கள்

சென்னை: சுஜித் இயக்கத்தில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்திருக்கும் ‘ஓஜி’ படம் வரும் 25ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் பிரியங்கா மோகன். இந்நிலையில் படக்குழுவினர் ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது ட்ரோல்ஸ் குறித்து பேசியிருக்கிறார் பிரியங்கா.

பிரியங்கா மோகனுக்கு அழகு இல்லை, நடிப்பு வரவில்லை, டான்ஸ் ஆட சுத்தமாக தெரியவில்லை என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள். தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் வந்த ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய பிரியங்கா மோகனை பயங்கரமாக கிண்டல் செய்தார்கள். இந்நிலையில் உங்களை பற்றி ஏகப்பட்ட மீம்ஸ் வருவது உங்களுக்கு தெரியுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது பிரியங்கா மோகன் கூறும்போது, ‘‘காசு கொடுத்து என்னை கலாய்க்கச் சொல்கிறார்கள். என்னை பிடிக்காதவர்கள் தான் ட்ரோல் செய்பவர்களுக்கு காசு கொடுத்து என்னை டார்கெட் செய்யச் சொல்கிறார்கள். அது யாரென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பணம் வாங்குபவருக்கு தெரியும். மீம்ஸ் பற்றி எல்லாம் நான் கவலைப்படுவது இல்லை.  என்னை பற்றி வரும் மீம்ஸுகள் பார்த்து நான் உடைந்து போவது இல்லை. மாறாக வலுவானவளாக ஆகிக் கொண்டிருக்கிறேன். யார் மீம்ஸ் போட்டால் எனக்கென்ன’’ என்று தெரிவித்துள்ளார் பிரியங்கா மோகன்.