Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரியங்கா மோகன் கர்ப்பம்? பரபரப்பு ஏற்படுத்திய போட்டோக்கள்

சென்னை: தமிழில் ‘டாக்டர்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘டான்’, ‘டிக் டாக்’, ‘கேப்டன் மில்லர்’, ‘பிரதர்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்களில் நடித்தவர், பிரியங்கா மோகன். தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் நடித்துள்ள அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தெலுங்கு படம், ‘ஓஜி’. இதில் அவர் பவன் கல்யாண் ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்றுதுள்ளது.

தற்போது தமிழில் கவினுடன் இணைந்து நடித்து வருகிறார். தவிர, ‘நித்தம் ஒரு வானம்’ ரா.கார்த்திக் இயக்கியுள்ள ‘மேட் இன் கொரியா’ என்ற வெப்தொடரின் மூலம் ஓடிடி தளத்தில் அறிமுகமாகிறார். திரைப்படங்கள், வெப்தொடர், விளம்பரங்கள் என்று பிசியாக இருக்கும் பிரியங்கா மோகன், நாள்தோறும் தனது இன்ஸ்டாகிராமில் தனது வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம்.

அவர் பதிவிடும் போட்டோக்கள் உடனே இணையதளங்களில் வைரலாகிவிடும். அந்தவகையில் அவர் கர்ப்பமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அந்த போட்டோக்கள் ‘ஓஜி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டவை என்பதை அறிந்த பிறகு ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.