Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மலைப்பாம்புடன் பிரியங்கா கொடுத்த போஸ்

முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா, விஜய் ஜோடியாக ‘தமிழன்’ என்ற படத்தில் அறிமுகமானார். தற்போது பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் அவர், கடந்த 2018ல் தன்னைவிட 10 வயது குறைந்த பாடகர் நிக் ஜோனாஸை காதல் திருமணம் செய்த பிறகு ஹாலிவுட்டுக்கு சென்றுவிட்டார்.

அவர்களுக்கு 2022ல் பெண் குழந்தை மால்டி பிறந்தது. தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் நடிக்கும் பிரியங்கா சோப்ரா, தனது கழுத்தில் மலைப்பாம்புடன் கொடுத்த போஸ் மற்றும் அருகில் பயத்துடன் நிற்கும் நிக் ஜோனாஸ் போஸ் வைரலானது. இதற்கு முன்பு பாம்புகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.