Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு தயாரிப்பாளர்களிடம் அதிக சலுகைகள் பெறும் நடிகர்கள்: ஆமிர் கான் விளாசல்

மும்பை: தமிழ் படவுலகில் மட்டுமின்றி, மற்றமொழி படங்களிலும் சில நடிகர், நடிகைகள் அதிகமான சம்பளத்தை தயாரிப்பாளர்களிடம் இருந்து பெறுகின்றனர். அதோடு, அவர்களுக்கான பல்வேறு சலுகைகளையும் தயாரிப்பாளர்களிடம் இருந்தே பெற்றுக்கொள்கின்றனர். உதாரணத்துக்கு அவர்களது டிரைவர், தனி உதவியாளர் வரையிலான சம்பளத்தையும் தயாரிப்பாளர்களிடம் இருந்து பெறுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இது பற்றி ஆமிர் கான் கூறியது: ஒரு தயாரிப்பாளர் என்பவர், தனது படத்துக்கு தேவையான விஷயங்களுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். ஒப்பனைக்கலைஞர், முடி ஒப்பனையாளர், உடைகள் தயாரிப்பவர் ஆகியோருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். அது படத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால், எனது உதவியாளரும், கார் ஓட்டுநரும் எனக்காக மட்டுமே வேலை செய்கின்றனர். அவர்களுக்கு ஏன் தயாரிப்பாளர் பணம் செலுத்த வேண்டும்? நான் மிகவும் சுயாதீனமானவன். எனது பணியாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் பணம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்பவில்லை. தயாரிப்பாளர்கள் இப்போது ஒரு நடிகரின் ஓட்டுநரின் சம்பளம், தேநீர் அல்லது காபி கொண்டு வரும் உதவியாளர், தனிப்பட்ட சமையல்காரர்கள் ஆகியோருக்கும் சம்பளம் கொடுக்கின்றனர். சில நட்சத்திரங்கள் சமையல் வேன், உடற்பயிற்சி வேன் ஆகியவற்றை படப்பிடிப்பு தளத்துக்கு கொண்டு வருகின்றனர். அதற்கும் தயாரிப்பாளரே பணம் கொடுக்கிறார். இதற்கு முடிவுதான் என்ன? இவ்வாறு ஆமிர்கான் கேட்டிருக்கிறார்.