Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இயக்குனர் ஆனார் வரலட்சுமி சரத்குமார்

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்முறையாக ஒரு திரைப்படத்தை இயக்கி, தயாரித்து நடிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘போடா போடி’ எனும் படத்தில் நாயகியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் கடந்தாண்டு திருமணம் செய்தார். இந்நிலையில், அவரது தங்கை பூஜா சரத்குமார் உடன் இணைந்து தோசா டைரீஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தத் தயாரிப்பில் தனது முதல் படமான சரஸ்வதி எனும் படத்தை அவரே இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலட்சுமி சரத்குமார், நவீன் சந்திரா, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் நடிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். முன்னனி இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை வெங்கட் ராஜன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சுதீர் மச்சர்லா கவனித்துக் கொள்கிறார். தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தை இயக்கி ஹீரோயினாக நடிக்கவுள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.