Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாணவனின் படத்தை தயாரிக்கும் பேராசிரியர்

சென்னை: முழுக்க முழுக்க மதுரையை சேர்ந்தவர்களின் பங்களிப்புடன் ‘மதுரை 16’ என்கிற அரசியல் திரில்லர் படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தை ஜான் தாமஸ் இயக்கியுள்ளார். ஜெரோம் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.ஜே எஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் ஸ்ரீதேவி சின்னையா, ஜீன் வில்லியம்ஸ் தயாரித்துள்ளனர்.உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ். ஹரி உத்ரா வெளியிடுகிறார். இந்த ‘மதுரை 16’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன், இயக்குநர் பேரரசு,சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செல்வன், நடிகர் ரோபோ சங்கர், படத்தின் ஒளிப்பதிவாளர் ரிஸ்வான் கான் இசையமைப்பாளர் சந்தோஷ் ஆறுமுகம் கதாநாயகி நிவேதா தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஜீன் வில்லியம்ஸ் ஒரு பேராசிரியர், படத்தை இயக்கும் ஜான் தாமஸ் அவரது மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் கே. ராஜன் பேசும்போது,‘‘300 கோடியில் எடுக்கிற படத்திற்கும் தியேட்டரில் டிக்கெட் விலை 100-150.இந்த படத்திற்கும் அதே விலை என்றால் ஏழை மக்கள் எப்படிப் படம் பார்ப்பார்கள்? இதைப் போன்ற படங்கள் என்றால் ஒரு 60 ,80 ,100 என்று டிக்கெட் விலைகளை நிர்ணயிக்க வேண்டும். தமிழக முதல்வர் சிறு முதலீட்டுப் படங்களுக்கு டிக்கெட் விலையைக் குறைத்து ஏழைகளைப் படம் பார்க்க வைக்க வேண்டும். டிக்கெட் கட்டணம் இப்படி இருப்பதால் ஏழைகள் திரையரங்கு வருவதற்குப் பயப்படுகிறார்கள்’’ என்றார்.