பெங்களூரு: தயாரிப்பாளர் தருண் கிஷோர் சுதீர் தயாரிப்பில், புனித் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஏழுமலை’ படத்தின் தலைப்பு டீசர், பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. சிவராஜ்குமார் இந்த டீசரை வெளியிட்டு, படக்குழுவுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இயக்குநர் ஜோகி பிரேம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, படம் வெற்றிகரமாக அமைய தனது பாராட்டுக்களைத்...
பெங்களூரு: தயாரிப்பாளர் தருண் கிஷோர் சுதீர் தயாரிப்பில், புனித் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஏழுமலை’ படத்தின் தலைப்பு டீசர், பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. சிவராஜ்குமார் இந்த டீசரை வெளியிட்டு, படக்குழுவுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இயக்குநர் ஜோகி பிரேம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, படம் வெற்றிகரமாக அமைய தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அற்புதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தில், ரக்ஷிதாவின் தம்பி ராண்ணா மற்றும் ‘மகாநதி’ புகழ் பிரியங்கா ஆச்சார் ஜோடியாக நடிக்கின்றனர்.
இப்படவிழாவில் சிவராஜ்குமார் பேசும்போது, ‘‘“இந்த டீசர் அருமையாக இருக்கிறது. நல்ல விஷயங்கள் நல்லவர்களுக்கே நடக்கின்றன என்பதற்கு இது ஒரு சாட்சி. ராண்ணா மிகவும் ஹேண்ட்சமாக இருக்கிறார். பிரியங்காவைப் பார்க்க ஒரு புதியவரைப் போலத் தெரியவில்லை. புதியவர்கள் வந்து சினிமாவை மாற்றவேண்டும். மக்கள் பாராட்டினால் லாபம் தானாக வரும். அது தான் எப்போதும் நடந்து வருகிறது. இப்படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள்’’ என்றார். இப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.