Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு பிரத்யேக செயலி!

டாக்டர்.புனீத் ராஜ்குமாரின் காலத்தால் அழியாத நினைவுகளை கொண்டாடும் விதமாக ஸ்டார்ஃ பேண்டம் நிறுவனம் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிவேக தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதியதளம் ரசிகர்கள்தங்கள் நட்சித்திரங்களுடன் இணைந்து இருப்பதில் ஒரு புரட்சிகரமான அனுபவத்தை வழங்குவதற்கான புதிய முயற்சியாகும்.

ஸ்டார்ஃ பேண்டம் நிறுவனத்தின் தலைவரான டாக்டர். சமார்த்த ராகவ நாகபூஷணம் மற்றும் அவரது குழுவினரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், அஸ்வினி புனீத் ராஜ்குமாருடன் இணைந்து டாக்டர். புனீத் ராஜ்குமாரை கொண்டாடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு முன்னோடி டிஜிட்டல் அனுபவமாகும்.

இந்த தளத்தில் தொழில்நுட்பம், உணர்வுகள், பொழுதுபோக்கு மற்றும் சினிமா பாரம்பரியங்களைப் பாதுகாப்பதோடு, ரசிகர்களுக்கும், அவர்களின் அன்புக்குரிய நட்சத்திரங்களுக்கும் இடையே நீடித்த டிஜிட்டல் பிணைப்புகளை உருவாக்குகிறது.

விளையாட்டுக் கழகங்கள், பிரபலங்கள் மற்றும் பொது ஆளுமைகளை அவர்களின் ரசிகர்களுடன் ஒரு ஸ்மார்ட் டிஜிட்டல் சூழல் மூலம் இணைக்கும் நோக்கத்துடன் ஸ்டார் ஃபேண்டம் உருவாக்கப்பட்டுள்ளது.