Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

புதிய பாதை 2 விரைவில் தயாராகும்: பார்த்திபன் தகவல்

1989ம் ஆண்டு பார்த்திபன் இயக்கி, நடித்த படம் 'புதிய பாதை'. பெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் சீதா, மனோரமா, வி.கே.ராமசாமி நடித்திருந்தார்கள். தன்னை பலாத்காரம் செய்த ரவுடியுடன் துணிச்சலாக சேர்ந்து வாழ்ந்து அவனை நல்வழிப்படுத்திய ஒரு பெண்ணின் கதை. இந்த படம் பல மொழிகளில் பல வடிவங்களில் அனுமதி இன்றி எடுக்கப்பட்டிருப்பதாக பார்த்திபன் தற்போது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். புதிய பாதை எத்தனை மொழிகளில் முறையான அனுமதியின்றி எடுக்கப்பட்டிருந்தாலும் மகிழ்ச்சி" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் 'புதிய பாதை' படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பார்த்திபன் "தற்போது தயாராகி வரும் படம் முடிந்ததும் 'புதிய பாதை 2' தயாராகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.