Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குயிலி விமர் சனம்

போதை அடிமைக்கு மகளாக பிறந்த குயிலி, மது பழக்கம் இல்லாத ரவிஷாவை காதல் திருமணம் செய்கிறார். செங்கல் சூளையில் ஏற்பட்ட விபத்துக்கு பிறகு தீவிர மது பழக்கத்துக்கு அடிமையாகும் ரவிஷா, ஒருகட்டத்தில் இறந்துவிடுகிறார். குடும்பங்களை சீரழித்து, பல பெண்களை விதவைகளாக்கும் மது அரக்கனை ஒழிக்க முடிவு செய்யும் குயிலி, கிராமத்திலுள்ள செல்வாக்கு மிகுந்தவரின் மதுபான கடையை எரிக்கிறார்.

குறிப்பிட்ட கட்சியில் இணைந்து, மதுவுக்கு எதிரான அறவழி போராட்டத்தில் ஈடுபடுகிறார். இந்நிலையில், அவர் கஷ்டப்பட்டு படிக்க வைத்த தனது மகனே கலெக்டரானதில் பெருமிதம் கொண்டு, அவரிடம் சென்று, சட்டப்படி கிராமத்திலுள்ள மதுக்கடைகளை மூட கோரிக்கை விடுக்கிறார். அதை ஏற்க மறுக்கும் கலெக்டர், குயிலியின் லட்சிய பயணத்துக்கு இடையூறு செய்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

இளம் வயது குயிலியாக தஷ்மிகா லக்‌ஷ்மன், சற்று வயதான குயிலியாக லிசி ஆண்டனி இருவரும் கேரக்டரை உணர்ந்து இயல்பாக நடித்து அசத்தியுள்ளனர். லிசி ஆண்டனியின் போராட்டமும், மகனே தன்னை புறக்கணிக்கும் நிலையில் எடுக்கும் முடிவும் குறிப்பிடத்தக்கது. குயிலியின் மகனாக கலெக்டர் வேடத்தில் வரும் வி.வி.அருண்குமார், மாமனாரின் மதுபான கடைகளுக்கு சலாம் போட்டு, பெற்ற தாய்க்கே துரோகம் செய்து வெறுப்பை சம்பாதிக்கிறார்.

வில்லன் ‘புதுப்பேட்டை’ சுரேஷ், ஹலோ கந்தசாமி, ரவிஷா, இயக்குனர் பி.முருகசாமி நேர்த்தியாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் பிரவீன்ராஜ், இசை அமைப்பாளர் ஜூ ஸ்மித், எடிட்டர் எஸ்.ராஜேஷ் கண்ணன் ஆகியோரின் பணிகள் சிறப்பாக இருக்கின்றன. குடியினால் ஏற்படும் தீமைகளை, பிரச்னைகளை சமூக அக்கறையுடன் எழுதி இயக்கியுள்ள பி.முருகசாமி, அதை திரைமொழியில் சொல்ல சற்று தடுமாறி இருக்கிறார்.