Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தக் லைஃப் படத்தில் இணைந்த ரகுமான் குஷ்பு மகள்கள்

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தக் லைஃப்’ படம் நேற்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் மணிரத்னத்திற்கு உதவி இயக்குனராக சிலர் பணிபுரிந்திருக்கின்றனர். அதில் குஷ்பு - சுந்தர்.சி -யின் மகள் அனந்திகா சுந்தரும் நடிகர் ரகுமானின் மகள் அலிஷாவும் முக்கியமானவர்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் குஷ்பு நெகிழ்ச்சியாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘‘மணிரத்னம் படத்தில் என் மகளின் பெயர் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கும்போது ஒரு பெற்றோராகப் பெருமையாக இருக்கிறது.

முழங்காலில் முறிவு ஏற்பட்டதால் குறுகிய காலம் மட்டுமே அவளால் உதவி இயக்குனராகப் பணியாற்ற முடிந்தது. ஆனால், மணி சாரிடமிருந்து அவள் பெற்ற அறிவும், கற்றுக்கொண்ட விஷயங்களும் அவளுடன் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்’’ என்றார். நடிகர் ரகுமானின் மகள் அலிஷா, இதில் முதல்முறையாக உதவி இயக்குனராக பணியாற்றியது மட்டுமின்றி படத்தில் நாசரின் மகளாகவும் நடித்திருந்தார். படத்தில் அவர் பணியாற்றியபோது எடுத்த புகைப்படங்களை இப்போது தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.