ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடித்து வரும் பான் வேர்ல்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 16ம் தேதி வெளியாகிறது. ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ படங்களின் வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி அடுத்து யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு உருவானது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘எஸ்எஸ்எம்பி29’ என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
இந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தின் ஹீரோவை தவிர இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எதையுமே படக்குழு வெளியிடவில்லை. நவம்பரில் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சி வரும் 15ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எக்ஸ் தள உரையாடல் மூலம் தொடங்கியிருக்கிறது என படக்குழு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 120 நாடுகளில் இப்படம் வெளியாக இருப்பதால், ஃபர்ஸ்ட் லுக்கும் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியை ஓடிடியில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
