Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரஜினி, விஜய், அஜித் சூர்யா படங்கள் ரீ-ரிலீஸ்: தயாரிப்பாளர் தாணு தகவல்

சென்னை: விஜய், ஜெனிலியா, வடிவேலு, பிபாஷா பாசு நடிப்பில் 2005ல் வெளியான ‘சச்சின்’ என்ற படம், 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 18ம் தேதி உலகம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்துக்கான வெற்றிவிழா சந்திப்பில் இயக்குனர் ஜான் மகேந்திரன், நடன இயக்குனர் ஷோபி பவுல்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது இசை அமைப்பாளர் தேவி பிரசாத் பேசுகையில், ‘சில மாதங்களுக்கு முன்பு ‘சச்சின்’ படத்தை மறுவெளியீடு செய்ய இருப்பதாக தாணு சார் சொன்னார். இப்போது படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, ‘இயக்குனர் ஜான் மகேந்திரன் சொன்ன கதையை கேட்டு குஷியான விஜய், உடனே கால்ஷீட் ெகாடுத்து நடித்தார். அப்போதே மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலிலும் சாதனை படைத்த இப்படம், தற்போது மறுவெளியீட்டிலும் சாதனை படைத்துள்ளது. விரைவில் அஜித் குமாரின் ‘கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்’, சூர்யாவின் ‘காக்க... காக்க’ ஆகிய படங்களை இந்த ஆண்டிற்குள்ளும், ரஜினிகாந்தின் ‘கபாலி’, விஜய்யின் ‘தெறி’, பாரதிராஜா இயக்கிய ‘கிழக்குச் சீமையிலே...’ ஆகிய படங்களை அடுத்த ஆண்டிலும் மறுவெளியீடு செய்கிறேன்’ என்றார்.