Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மீண்டும் தெலுங்கில் ரம்யா

ரம்யா நம்பீசன் சினிமாவில் நடிக்கத்தொடங்கி 23 ஆண்டுகள் ஆகிவிட்டது. தென்னிந்திய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் கடந்த 2008ல் ‘அந்தமைனா மனசுலோ’ படத்தில் அறிமுகமானார். இதையடுத்து ‘சாரை வீரராஜூ’, ‘நுவ்விலா’, ‘தெலுகப்பாய்’ ஆகிய படங்களில் நடித்தார். பிறகு ஏனோ நடிக்கவில்லை. தற்போது 10 வருடங்களுக்குப் பிறகு ‘தயா’ என்ற தெலுங்கு வெப்தொடரில் நடிக்கிறார். ‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் மற்றும் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தியதால், தெலுங்கு பக்கமாக செல்ல முடியவில்லை.

இனி தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பேன்’ என்ற ரம்யா நம்பீசன், தமிழில் ‘ஒரு நாள் ஒரு கனவு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் ஆண்டனியுடன் ‘தமிழரசன்’ படத்தில் நடித்தார். தற்போது தமிழில் ‘ரேஞ்சர்’, மலையாளத்தில் ‘ஹர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சொந்தக்குரலில் பாடுவதிலும் கவனம் செலுத்துகிறார்.