சென்னை: ராஷ்மிகா மந்தனாவின், புதிய பான் இந்தியா திரைப்படம் ‘மைசா’. இதன் பர்ஸ்ட் லுக் வெளியானது. பிரபல இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராக பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அன்ஃபார்முலா பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி...
சென்னை: ராஷ்மிகா மந்தனாவின், புதிய பான் இந்தியா திரைப்படம் ‘மைசா’. இதன் பர்ஸ்ட் லுக் வெளியானது. பிரபல இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராக பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அன்ஃபார்முலா பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார்.
நேற்றைய அட்டகாசமான அறிவிப்பு போஸ்டரைத் தொடர்ந்து, இந்த திரைப்படத்தின் தலைப்பும், ராஷ்மிகாவின் மிரட்டலான லுக்குடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ளனர். மைசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், ஒரு பாரம்பரிய புடவையில், பழங்குடி நகைகள் மற்றும் மூக்குத்தியுடன் காட்சியளிக்கும் ராஷ்மிகா, கோண்ட் பழங்குடியினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தோற்றத்தில் முற்றிலும் புதிய மற்றும் பயமுறுத்தும் முகபாவனையுடன் காட்சியளிக்கிறார். ரத்தம் சிந்திய தோற்றமும், கைப்பிடியில் பிடித்து வைத்திருக்கும் மர்மப் பொருளும், கதையின் மிரட்டலான தருணங்களை நமக்கு முன்வைக்கின்றன. ஆக்ஷன் திரில்லராக உருவாகிறது.