தமிழில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடிப்பில் ‘மதராஸி’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்த ஏ.ஆர்.முருகதாஸ், திடீரென்று ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு, இந்தியில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால் நடித்த ‘சிக்கந்தர்’ என்ற படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்றார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், இப்படத்தின் தோல்வி குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த...
தமிழில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடிப்பில் ‘மதராஸி’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்த ஏ.ஆர்.முருகதாஸ், திடீரென்று ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு, இந்தியில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால் நடித்த ‘சிக்கந்தர்’ என்ற படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்றார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், இப்படத்தின் தோல்வி குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. ‘நான் இயக்கிய ‘சிக்கந்தர்’ என்ற படத்தின் கதை, என் மனதுக்கு நெருக்கமான ஒன்று.
ஒரு ராஜா தனது மனைவியை பற்றி அவர் வாழும்போது புரிந்துகொள்ளவில்லை. நாம் அனைவருமே இப்படித்தான். எப்போதும் நம்முடனேயே இருப்பார்கள் என்று நினைத்து மரியாதை தருவது இல்லை. ஒருநாள் திடீரென்று மறையும்போதுதான், ‘இன்னும் சிறிது நேரம் அவர்களுக்காக நாம் நேரம் ஒதுக்கி இருக்கலாமே’ என்று தோன்றும். அப்படி ஒரு மனைவி இறக்கும்போது, அவரது உறுப்புகள் 3 பேருக்கு தானம் செய்யப்படுகிறது. கணவன் தனது மனைவிக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை, மனைவியின் உறுப்புகளை தானமாக பெற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என்று அந்த கணவன் நினைக்கிறார். அப்போது அவருக்கு ஒரு ஊரே நட்பாகிறது.
இதை வைத்து கதை எழுதினேன் என்றாலும், அதை என்னால் சரியாக செயல்படுத்த முடியவில்லை. இப்படத்தின் தோல்விக்கு நான் மட்டுமே காரணம் இல்லை’ என்றார். தமிழில் அவர் எழுதி இயக்கியுள்ள ‘மதராஸி’ படம், வரும் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.