Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா

கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய படவுலகங்களை தாண்டி தற்போது இந்தியிலும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர், ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘குபேரா’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து தெலுங்கில் ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தில் நடித்து வருகிறார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் அவர், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘நான் கொடவா சமூகத்தை சேர்ந்தவள். இதுவரை இந்த இனத்தில் இருந்து யாரும் திரைத்துறைக்கு வந்ததில்லை. இந்த இனத்தில் இருந்து முதலாவதாக சினிமாவில் நடிகையாக நுழைந்தவள் நான் மட்டும்தான்’ என்று பேசியது பலத்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கொடவா இனத்தில் இருந்து நெரவந்தா செட்டிச்சா பிரேமா, ரீஷ்மா நானையா, ஹர்ஷிகா பூனச்சா, அஸ்வினி நாச்சப்பா, டெய்சி போபண்ணா, ஸ்வேதா செங்கப்பா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் திரைத்துறையில் நடிகைகளாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர். இந்நிலையில், எந்த விவரமும் தெரியாமல் ராஷ்மிகா மந்தனா பேசியிருக்கிறார் என்று, கன்னட மக்கள் அவரை கடுமையாக சாடி வருகின்றனர். முன்னதாக, ‘எனது வீடு ஐதராபாத்தில் இருக்கிறது, கர்நாடகா எங்கே இருக்கிறது என்றே எனக்கு தெரியாது’ என்று பேசி சர்ச்சையில் சிக்கி மீண்டு வந்தார். இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட, திரையுலகில் ராஷ்மிகா மந்தனாவுக்கான வரவேற்பும், மவுசும் குறையவில்லை.