Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காதல் தோல்வி குறித்து ராஷ்மிகா

வரும் நவம்பர் 14ம் தேதி ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற படம் திரைக்கு வருகிறது. இதை நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். இவர், பாடகி சின்மயியின் கணவர். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், ‘காதல் தோல்வி ஏற்பட்டு காதலர்கள் பிரிந்தால், ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால், ஆண்களை பொறுத்தவரையில் தங்களது காதல் தோல்வியை வெளிப்படுத்த தாடி வளர்க்கின்றனர். சரக்கு அடித்துவிட்டு, காதல் தோல்வியை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகின்றனர். பெண்களை பொறுத்தவரையில் தாடி வளர்க்க முடியாது, சரக்கு கூட அடிக்க முடியாது.

அதனால், மனதளவில் தங்களுக்குள்ளேயே மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். யாருக்கும் தெரியாமலேயே சோகத்தை தங்களுக்குள் மறைத்து வைத்துக்கொள்கின்றனர். காதல் தோல்வியை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால், ஆண்கள் அளவுக்கு பெண்கள் காதல் பிரிவை நினைத்து கவலைப்படுவது இல்லை என்று ஒரு கருத்து உலா வந்து கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவும், அவரும் தீவிரமாக காதலித்து வரும் நிலையில், சமீபத்தில் அவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் பிப்ரவரி மாதம் அவர்களின் திருமணம் விமரிசையாக நடக்கிறது.