Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அதிக நேர வேலை ராஷ்மிகா உர்ர்ர்....

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என சொல்லப்பட்டு வந்தது. இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்லும் போட்டோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிறது. சமீபத்தில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகி வருகிறது. தற்போது இருவரும் அவரவர் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாடகி சின்மயி கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படம் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் நிகழ்ச்சியில் தனது வேலை நேரம் குறித்து ராஷ்மிகா பேசிய விஷயம் கவனம் பெற்றுள்ளது. அவர் பேசுகையில், ”நான் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்கிறேன். ஆனால், இதை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். 8 மணி நேரத்திற்குமேல் வேலைபார்ப்பது நமது வாழ்க்கை மற்றும் உடல் நலத்தைக் கெடுத்துவிடும். இந்த அதிக நேர வேலையை தவிர்க்கவில்லை என்றால் பின்னாளில் நாம் வாழ்க்கையில் மிகவும் வருந்த வேண்டிய நிலை உருவாகும். அலுவலகங்களில் 9 டு 5 என்ற வேலை நேரம் இருப்பதுபோல், சினிமாத்துறையிலும் அதுபோன்ற நேர அளவு இருக்க வேண்டும். நான் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் ஒதுக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.