Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரவி மோகன் கெனிஷா திடீர் இலங்கை பயணம்

கொழும்பு: ரவி மோகனும் அவரது காதலி கெனிஷாவும் திடீரென இலங்கைக்கு சென்றுள்ளனர். படங்களில் நடிப்பதை தாண்டி ரவி மோகன் நிறைய நிகழ்ச்சிகள் செல்வது, படம் தயாரிப்பது, ஆன்மிக மையம் அமைப்பது தொடர்பான ஆயத்த பணிகள் என பிஸியாக உள்ளார். இந்த மாற்றம் அனைத்தும் சமீபகாலமாகத்தான் அவரிடம் பார்க்க முடிகிறது. மனைவியை பிரிந்துள்ள அவர், அண்மையில் பாடகி கெனிஷாவுடன் இலங்கை பயணம் செய்துள்ளார்.

அவர்கள் இருவரும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித் ஹெராத்தை சந்தித்து பேசியுள்ளனர். பாடகி கெனிஷாவின் இசை நிகழ்ச்சி இலங்கையில் நடத்துவதற்கான பேச்சு வார்த்தை நடந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், ஆன்மிக மையம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் அவர்கள் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விஜித் ஹெராத் டிவிட்டரில் கூறும்போது, ‘‘திரையுலக சுற்றுலாவுக்கு புதிய வழியாக இந்த சந்திப்பு இருந்தது’’ என தெரிவித்துள்ளார். ஏற்கனவே கெனிஷாவுடன் இணைந்து ஆன்மிக மையம் அமைக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் ரவி மோகன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.