நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கும் ‘அன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தின் புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவியாக இருந்து ரவி மோகன் என்ற புதுப்பெயருக்கு மாறிய அவர், ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா கடந்த மாதம் சென்னையில் நடந்தது. இவ்விழாவில்...
நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கும் ‘அன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தின் புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவியாக இருந்து ரவி மோகன் என்ற புதுப்பெயருக்கு மாறிய அவர், ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா கடந்த மாதம் சென்னையில் நடந்தது. இவ்விழாவில் அவரது நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களின் அறிவிப்பு வெளியானது. இதில் ரவி மோகன், ‘நான் இயக்குனராகி விட்டேன்’ என்று அதிக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் யோகி பாபுவை கதையின் நாயகனாக நடிக்க வைத்து இயக்கும் படத்துக்கு ‘அன் ஆர்டினரி மேன்’ என்று பெயரிட்டுள்ளார்.
இதுகுறித்து யோகி பாபு கூறுகையில், ‘ரவி மோகனும், நானும் கடந்த 2019ல் வெளியான ‘கோமாளி’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றும்போது ஒருநாள், ‘நான் படம் இயக்கினால், அதில் நீங்கள்தான் ஹீரோ’ என்று சொன்னார். இப்போது 6 வருடங்கள் கழித்து அன்று சொன்னதை மறக்காமல் நிறைவேற்றி இருக்கிறார் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார். இந்நிலையில், ரவி மோகன் பிறந்தநாளான நேற்று இப்படத்தின் புரோமோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஜெய் சாரோலா ஒளிப்பதிவு செய்ய, ஹைட்ரோ இசை அமைக்கிறார். பிரதீப் இ.ராகவ் எடிட்டிங் செய்கிறார்.