ரவி மோகன் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பாடல்களும் வைரல் ஹிட். இந்தப் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் ரவி மோகன் நடித்துள்ள திரைப்படம் ‘ஜீனி’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுன் இயக்கியுள்ளார்.
ஐசரி கணேஷின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் அப்டி அப்டி எனத் தொடங்கும் சிங்கிள் ரிலீசாகி வரவேற்பை பெற்று வருகிறது. கணேஷ் ஆசார்யாவின் கோரியோகிராபியில், க்ரித்தி ஷெட்டி மற்றும் ஜெயம் ரவியின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இரு நடிகைகளுடன் நடனம் ஆடும் ஹீரோ பாடல்கள் வெளியாக பல காலங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்தப் பாடல் மேலும் டிரண்டாகி வருகிறது.