Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரியல் எஸ்டேட் மோசடி விவகாரம் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

திருமலை: ரியல் எஸ்டேட் மோசடி தொடர்பாக ரியல் எஸ்டேட் உரிமையாளர், பிரபல நடிகர் மகேஷ்பாபு உள்பட 3 பேருக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் ரியல் எஸ்டேட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் காஞ்சர்லா சதீஷ் சந்திரகுப்தா. இவர் வீட்டுமனைகளை விற்பதற்காக பல்வேறு வகையில் விளம்பரம் செய்திருந்தார்.

இந்த விளம்பரத்தில் பிரபல தெலுங்கு-தமிழ் நடிகரான மகேஷ்பாபு நடித்திருந்தார். இதனால் ஏராளமானோர் வீட்டு மனை வாங்க லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் முறையாக வீட்டுமனை விற்பனை செய்யவில்லையாம். பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்டேட் உரிமையாளர் காஞ்சர்லா சதீஷ்சந்திரகுப்தா, மகேஷ்பாபு உள்பட 3 பேர் மீது நுகர்வோர் ஆணையத்தில் மருத்துவர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி மகேஷ்பாபு உள்ளிட்டோருக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.