Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரீரிலீசிலும் வரவேற்பு பெற்ற புதுப்பேட்டை

சென்னை: 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வெளியான பல படங்கள் மறு ரிலீஸாகி மக்களிடையே வரவேற்பு பெறுகின்றன. விஜய்யின் ‘கில்லி’ படம் ரீரிலீஸ் ஆனபோது நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ படம் 100 தியேட்டர்களில் ரீரிலீஸ் ஆகி நல்ல வசூலை பெற்றுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘புதுப்பேட்டை’ படத்தை கடந்த ஜூலை 26ம் தேதியன்று தமிழ் நாட்டில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டனர்.

இந்த படம் வெளியான காலகட்டத்திலும் அதிகம் பேசப்பட்டது. அந்த வகையில் இப்போதும் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே ஆதரவு கிடைத்திருக்கிறது. விஜய் சூர்யா பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனர் வி.எஸ். சரவண பவா, இப்படத்தை ரீ ரிலீஸ் செய்தார். ரீ ரிலீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து தற்போது சரவண பவா தனுஷை சந்தித்து வாழ்த்து பெற்றார்.