Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விமர்சனம் ஆக்கிரமிப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில், உப்பள தொழிலாளிகளிடம் இருந்து அடாவடியாக உப்பு கடத்தும் ரவுடி வான்யா, தன்னை எதிர்ப்பவர்களை கொல்கிறார். இதை எதிர்க்கும் அழகு பிரகாஷின் தாய்மாமா நிர்மல், வான்யாவுக்கு உப்பு தராமல், அங்குள்ள வேறொருவருக்கு விற்க முடிவு செய்கிறார். இதையறிந்த வான்யா, உடனே நிர்மல் மனைவியை கொல்கிறார். இதை கண்டு கொதிக்கும் அழகு பிரகாஷ், வான்யாவை என்ன செய்தார் என்பது மீதி கதை.

ஆக்ரோஷமாக நடித்துள்ள அழகு பிரகாஷ், காதலி சுகன்யாவை விட்டு விலகியே இருக்கிறார். கிராமத்து அழகு பெண்ணாக சுகன்யா மனதை கவர்கிறார். இயக்குனர் வான்யா அட்டகாசமாக நடித்துள்ளார். தீபா சங்கர், பலே. ‘என் ராசாவின் மனசிலே’ நிர்மல், ரஞ்சன், ‘விக்ரம் வேதா’ விஜய் சத்யா, சுமதி, குபேரர், வதிலை வசந்தா, முத்துச்சிப்பி உள்பட அனைவரும் நன்கு நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சாய் நந்தாவின் கேமராவுக்கு அப்ளாஸ் தரலாம். பாடல்களிலும், பின்னணி இசையிலும் ஜான் பீட்டர் கடுமையாக உழைத்துள்ளார். வினைக்கு எதிர்வினை உண்டு என்று எழுதி இயக்கியுள்ள வான்யா, பிரமாண்ட பட்ஜெட் இல்லாமல் திணறியிருக்கிறார் என்றாலும், பழிவாங்கும் யுக்தியை வேறொரு கோணத்தில் வழங்கியுள்ளார்.