Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விமர்சனம்: mrs&mr

காதல் திருமணம் செய்துகொண்ட வனிதாவும், ராபர்ட்டும் பாங்காக்கில் சந்தோஷமாக வாழ்கின்றனர். 40 வயதான வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார். ராபர்ட்டுக்கு குழந்தை என்றாலே பிடிக்காது. பிறகு வனிதா குழந்தை பெற்றுக்கொண்டாரா? குழந்தை வேண்டாம் என்று ராபர்ட் சொல்வதற்கு என்ன காரணம் என்பது மீதி கதை.

படத்தை இயக்கி நடித்துள்ள வனிதா, குழந்தை பெறுவதற்காக ராபர்ட்டிடம் அத்துமீறுவது எல்லாம் ஓவர் ரகம். அவரது கணவராக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், வனிதாவின் விளையாட்டுகளுக்கு ஈடுகொடுத்துள்ளார். வனிதாவின் அம்மாவாக ஷகீலா மற்றும் டாக்டர் சீனிவாசன், பாத்திமா பாபு, ஸ்ரீமன், ஆர்த்தி, கணேஷ்கர், ரவிகாந்த், அனுமோகன், வாசுகி, ஸ்வேதா பாரதி ஆகியோர், இயக்குனர் சொன்னதை செய்திருக்கின்றனர். கிரண் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். (அப்பாடலுக்குத்தான் இப்போது காப்பிரைட் பிரச்னை ஏற்பட்டுள்ளது)

டி.ராஜபாண்டி, விஷ்ணு ராமகிருஷ்ணன், டி.ஜி.கபில் ஆகியோரின் ஒளிப்பதிவில் பாங்காங்கை ரசிக்க முடிகிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்துள்ளது. இன்றைய தலைமுறைக்காக படத்தை உருவாக்குகிறேன் என்ற பெயரில் ஓவர் கவர்ச்சி, டபுள் மீனிங் டயலாக், நட்சத்திர பட்டாளம் என்று, கதையை நேர்த்தியாக சொல்ல தடுமாறி இருக்கிறார், எழுதி இயக்கி தயாரித்துள்ள வனிதா.