Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விமர்சனம்: ராஜபுத்திரன்

கடந்த 1990களில் அந்த ஊரில் அனைவராலும் மதிக்கப்படும் ஒருவரான பிரபு, தாயில்லாத தன் மகன் வெற்றியை உயிராக நினைத்து வளர்க்கிறார். மழையின்றி விவசாயம் பொய்த்ததால், தந்தைக்கு தெரியாமல் ஒரு வேலைக்கு செல்கிறார் வெற்றி. வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தை ஊரில் இருப்பவர்களிடம் சேர்க்கும் சட்டவிரோத செயலை செய்யும் கோமல் குமாரிடம் வேலைக்கு சேரும் வெற்றி, அங்கு ஏற்பட்ட பிரச்னைகளால், மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். அவர் காதல் திருமணம் செய்த கிருஷ்ணபிரியாவுக்கு விஷயம் தெரிகிறது. இதையெல்லாம் அறிந்த பிரபு, தன் மகன் வெற்றிக்காக என்ன செய்கிறார் என்பது மீதி கதை.

தந்தை, மகன் பாசத்தை வழக்கமான பார்முலாவிலேயே சொல்லியிருக்கிறார், எழுதி இயக்கிய மகா கந்தன். பாசத்தை பொழியும் தந்தையாக சிறப்பாக நடித்த பிரபு, தன் மகனின் உயிரை காப்பாற்ற வில்லனை ஆக்ேராஷமாக அடித்திருக்கிறார். தந்தைக்கு கட்டுப்பட்ட வெற்றி, காதலி கிருஷ்ணபிரியாவிடம் அதிக நெருக்கம் காட்டியுள்ளார். மலையாள நடிகை கிருஷ்ணபிரியா, காதல் காட்சி களில் சுறுசுறுப்பாக நடித்துள்ளார். பழைய ேஜாக் தங்கதுரையும், இமான் அண்ணாச்சியும் சிரிக்க வைக்க கடுமையாக போராடியுள்ளனர். வில்லன் கோமல் குமார், அவருடைய விசுவாசி லிவிங்ஸ்டன், எதிர் கோஷ்டி ஆர்.வி.உதயகுமார், கறார் வட்டி மன்சூர் அலிகான் ஆகியோர், தங்களின் திரை இருப்பை பதிவு செய்திருக்கின்றனர். அஸ்மிதா கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

வறட்சியான சிவப்பு பூமியை வெகு இயல்பாக காட்டியிருக்கிறார், ஒளிப்பதி வாளர் ஆலிவர் டெனி. ராகேஷ் ராக்கி அமைதத சண்டைக் காட்சிகள் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. ஏஐஎஸ் நவ்பல் ராஜா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதையின் நகர்வுக்கு உதவியிருக் கிறது. லாஜிக்குகள் இல்லாத, அடுத்த காட்சியை எளிதில் கணித்துவிடக்கூடிய திரைக் கதை மைனஸ். இயக்குனர் மாற்றி யோசித்திருக்கலாம்.