Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை: அதர்வா முரளி

சென்னை: தமிழ் படவுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர், மறைந்த முரளி. அவரது மூத்த மகன் அதர்வா முரளி, பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். தற்ேபாது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா ஆகியோருடன் இணைந்து ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்துள்ள அதர்வா முரளியிடம், ‘வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்?’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அதர்வா முரளி, ‘என்னை பற்றிய கடுமையான விமர்சனங்கள் இதுவரை பெரிய அளவில் வந்ததில்லை என்றாலும், எனக்கு முன்னால் நிறைய சவால்கள் இருந்தது என்னவோ உண்மை. என்னதான் நான் பிரபல நடிகரின் மகன் என்ற அடையாளத்துடன் திரைத்துறைக்கு வந்தாலும், நான் சந்தித்த ஒவ்வொரு களமும் எனக்கான உத்வேகத்தை கொடுத்து, நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்தியது. எனவே, எந்த விமர்சனமும் என்னை கடுமையாக பாதிக்கவில்லை’ என்றார்.