மும்பை: பாலிவுட் முன்னணி நடிகை திஷா பதானி, தமிழில் சூர்யா ஜோடியாக ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்தார். சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கும் அவர், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்கள், திஷா பதானி தனது முன்னழகை அதிகரிக்க, விலா எலும்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தகவல் பரப்பியுள்ளனர். அதாவது, விலா எலும்புகளை...
மும்பை: பாலிவுட் முன்னணி நடிகை திஷா பதானி, தமிழில் சூர்யா ஜோடியாக ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்தார். சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கும் அவர், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்கள், திஷா பதானி தனது முன்னழகை அதிகரிக்க, விலா எலும்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தகவல் பரப்பியுள்ளனர். அதாவது, விலா எலும்புகளை அகற்றும் அறுவை சிகிச்சை (Rib Removal Surgery) செய்துகொண்டதாகவும், 11 மற்றும் 12வது விலா எலும்புகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் பதிவிட்டுள்ளனர்.
இந்த சிகிச்சையின் மூலம் இடுப்பை மெல்லியதாகவும் மற்றும் முன்னழகை மாற்றி காட்ட முடியும் என்பதாலும், திஷா பதானி சிகிச்சையை மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. இதை மறுத்துள்ள சில நெட்டிசன்கள், ‘பிரபலங்கள் சிலர் பில்டர்ஸ் பயன்படுத்தி, போட்டோ அல்லது வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் இடுப்பு பகுதி மெலிந்து காணப்படும். திஷா பதானியின் வீடியோவை கூர்ந்து கவனித்தால், அவர் விலா எலும்புகளை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்ற விவரம் தெரியும். இந்த சிகிச்சை பாதுகாப்பானது இல்லை. மருத்துவர்களும் இதை பரிந்துரை செய்வதில்லை’ என்று பதிவிட்டுள்ளனர். வழக்கம்போல் திஷா பதானி பதிலளிக்காமல் மவுனமாக இருக்கிறார்.