‘காந்தாரா’ படத்தின் முன்கதையாக ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’, தற்போது 655 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில், ஒரு ஷாட்டில் தற்ேபாது பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன் இருந்தது நெட்டிசன்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 4ம் நூற்றாண்டு கதையில் தண்ணீர் கேன் எப்படி வந்தது என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் ரிஷப் ஷெட்டி நேற்று வெளியிட்டுள்ள பதிவில், கிளைமாக்ஸ் படமானபோது தனது கால் வீக்கம் அடைந்த சில போட்டோக்களை வெளியிட்டு, ‘இது கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்தபோது வீங்கிய கால்கள், சோர்வடைந்த உடல். அந்த காட்சியே கோடிக்கணக்கானவர்கள் பார்த்து ரசிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இது நாங்கள் நம்பும் தெய்வீக சக்தியின் ஆசியால் சாத்தியமானது. எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
+
