Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நண்பரை திருமணம் செய்யும் ரித்விகா

‘பரதேசி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘ஒரு நாள் கூத்து’ உள்பட பல படங்களில் நடித்தவர், ரித்விகா. சமீபத்தில் ரிலீசான ‘லெவன்’, ‘டிஎன்ஏ’ ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில், நேற்று திடீரென்று தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது நீண்டகால நண்பர் வினோத் லட்சுமணன் என்பவரை இருவீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துகொள்வதாக அறிவித்துள்ளார்.

நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதி செய்யும் சில போட்டோக்களுடன், ‘கைத்தலம் பற்ற’ என்ற கேப்ஷனையும் அவர் பதிவிட்டுள்ளார். திருமணம் எப்போது, எந்த இடம் என்பது பற்றி அவர் சொல்லவில்லை. மேலும், திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா? மற்ற நடிகைகளுக்கு டப்பிங் பேசுவாரா என்பது பற்றியும் அவர் பதிவிடவில்லை.