Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரொட்டர்டாம் பட விழாவில் மயிலா

சென்னை: நடிகை, எழுத்தாளர், இயக்குனர் செம்மலர் அன்னம் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ‘மயிலா’ நியூட்டன் சினிமா கம்பெனி தயாரிப்பில் இயக்குனர் பா. ரஞ்சித் வழங்குகிறார். இப்படம், 55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR)-வில் நடைபெறும் ‘பிரைட் ஃப்யூச்சர்’ பிரிவில் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8, 2026 வரை திரையிடப்படும்.

அனைத்து மொழித் திரைப்படங்களில் ஒன்றாக மயிலா படமும் திரையிடப்பட உள்ளது.தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தை பின்னணியாகக் கொண்ட ‘மயிலா’ திரைப்படம், தனது சுதந்திரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடும் பெண்ணான பூங்கொடியின் கதையைச் சொல்கிறது.