Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமனை அதிர வைத்த சச்சின்

தென்னிந்திய படவுலகில் பிரபல இசை அமைப்பாளராக இருக்கும் தமன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி வெளியான ‘ஓஜி’ என்ற தெலுங்கு படத்துக்கு இசை அமைத்தார். சுஜீத் இயக்கிய இப்படம் கடந்த 11 நாட்களில் உலகம் முழுவதும் 308 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்ற தமன், பிறகு துபாய் சென்றார். அப்போது அவர் பயணித்த அதே விமானத்தில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பயணித்தார்.

இதையறிந்து இன்ப அதிர்ச்சியடைந்த தமன், அவரை சந்தித்து பேசினார். இதுகுறித்து தமன் கூறுகையில், ‘கிரிக்கெட்டின் கடவுள் தி லெஜண்ட்டுடன் நான் பயணித்தேன். டல்லாஸில் இருந்து துபாய் வரும் வரை நன்றாக பொழுதுபோனது. கிரிக்கெட் செலிபிரிட்டி லீக்கில் நான் பேட்டிங் செய்த ஒரு வீடியோவை அவரிடம் காண்பித்தேன். எனக்கு நல்ல பேட் வேகம் இருப்பதாக சொல்லி பாராட்டினார். விரைவில் அவருடன் இணைந்து நான் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.