Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மனோதத்துவ கதையில் சாய் தன்ஷிகா

சென்னை, ஜூன் 2: சாய் சினிமாஸ் சார்பில் டி.தாமோதரன் தயாரித்து ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதில் சாய் தன்ஷிகா, மெல்வின், ‘விக்ரம் வேதா’ பிரேம் குமார், கீதா கைலாசம், சிம்ரன் குப்தா, ‘அமரன்’ பால், சுவீஸ் சரண், சனாகான், அனீஸ், சினன், வேம்பரசன், ஓடிசி செந்தில், நமச்சிவாயம் நடிக்கின்றனர். ேமத்யூ ஜாப் இசை அமைக்கிறார். திரைப்படக் கல்லூரி மாணவர் அசோக் குமார் எழுதி இயக்குகிறார். ஒருவரது ஆழ்மனதில் மறைந்திருக்கும் அமைதி மற்றும் வன்முறையை மனோதத்துவ ரீதியில் அணுகும் கதையுடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் மற்றும் ஜாலி பாய், டிகிலிபூர் ஆகிய தீவுகளில் ஒரேகட்டமாக நடத்தப்படுகிறது.