Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சாய் பல்லவியின் பிகினி உடை போட்டோ சர்ச்சை: AI இல்லை, உண்மையான போட்டோ!

சென்னை: மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி, தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார். இதுவரை எந்த படத்திலும் கவர்ச்சியாக நடிக்காத அவரது நீச்சல் உடை போட்டோ வைரலாகி, பலத்த சர்ச்சையில் சிக்கினார். கவர்ச்சியாக நடிக்கக்கூடாது, ஆபாசமாக உடை அணியக்

கூடாது என்பது சாய் பல்லவி யின் கொள்கை. பல படங்களில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளார்.

ஆனால், பிகினி உடையில் அவர் கொடுத்த போஸ் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தனது ஒரே தங்கை பூஜா கண்ணனுடன் பதிவிட்ட போட்டோவில் சாய் பல்லவி பிகினி உடை அணியவில்லை. ஆனால், இணையதளங்களில் பரப்பப்பட்டுள்ள வீடியோவில், அவர் பிகினி உடை அணிந்து இருப்பது போல் காணப்பட்டது. இறுதியில், இது AI போட்டோ என்ற விஷயம் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு ரசிகர்களும் இது நிஜமான போட்டோ இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் வெளியிட்ட சில போட்டோக்களை போலவே இன்னும் சில போட்டோக்களும் வெளியாகி இருந்தது. ஆனால், சாய் பல்லவி பிகினி உடை அணிந்த போட்டோ மட்டு்ம் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. ‘மற்ற நடிகைகளை போல் சாய் பல்லவியும் கவர்ச்சி காட்ட துணிந்துவிட்டார்’ என்று சிலர் கடுமையாக விமர்சித்தனர்.  இதுபோன்ற வதந்திகள் வேகமாக பரவிய நிலையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாய் பல்லவி விளக்கம் அளித்துள்ளார்.

பூஜா கண்ணனுடன் இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிரா மில் பகிர்ந்துள்ள அவர், ‘இது முழுக்க முழுக்க ஒரிஜினல் பதிவு. ஏ.ஐ பதிவு இல்லை’ என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே வெளியான சாய் பல்லவியின் பிகினி உடை போட்டோக்கள் போலியானவை என்றும், சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் படமாக்கப்பட்டவை உண்மையான போட்டோக்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து சாய் பல்லவி யின் பிகினி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.