மும்பை: இந்தி டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க தனக்கு 11 வருடங்களாக அழைப்பு வருவதாகவும், அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார், தனுஸ்ரீ தத்தா. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: டிவி நிகழ்ச்சியில் பல நாட்கள் என்னால் பணியாற்ற முடியாது. நான் எனது குடும்பத்துடன் கூட அதிக நாள் தங்குவது இல்லை. வெளியே சுற்றிக்கொண்டே இருப்பவள் நான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்தது இல்லை.
இருக்கவும் இருக்காது. எனக்கு ரூ.1.65 கோடி சம்பளம் தருவதாக சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். பிறகு எனது இடத்துக்கு இன்னொரு நடிகை சென்றார். அவருக்கும் அதே அளவு தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இருந்து பேசிய நபர், என் ‘டயட்’டை கவனித்துக்கொள்வதாகவும் சொன்னார்.
அவர்கள் விலைமதிப்பற்ற ஒன்றை கொடுத்தால் கூட வர மாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டேன். மீண்டும் நடிக்க வந்தாலும் எனக்கு பணம் கொட்டும். ஆனால், எனக்கு பணத்தின் மீது ஆசை கிடையாது. ஆன்மிக வழியில் அமைதி காண்கிறேன். அதிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டேன்.