Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஏஐ துணையின்றி கலக்கும் சமந்தா

இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடைசியாக ‘சுபம்’ என்ற தெலுங்கு படத்தை தயாரித்து, அதில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற இந்தி வெப்தொடரில் நடித்திருந்தார். இதை இயக்கிய ராஜ் நிடிமோருவுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு பிறகு காதலாக மாறியுள்ளது. இத்தகவலை இருவரும் பொதுவெளியில் மறுக்காமல், அடிக்கடி அவுட்டிங் சென்று வருகின்றனர். விரைவில் தங்கள் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது. நடிப்பில் முழு கவனத்தை செலுத்தி வரும் சமந்தா, தனது ட்ராலாலா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ‘மா இன்ட்டி பங்காரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், ராஜ் நிடிமோரு இயக்கும் ‘ரக்த் பிரமாண்ட்: தி ப்ளடி கிங்டம்’ என்ற இந்தி வெப்தொடரிலும் நடிக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக சமந்தா ஹீரோயினாக நடித்து எந்த படமும் திரைக்கு வரவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் அவருக்கான மவுசு சிறிதளவும் குறையாமல் இருக்கிறது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் புதிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த சில நெட்டிசன்கள், தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் ஜெமினி ஏஐயுடன் சமந்தா வெளியிட்டுள்ள போட்டோவை ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இது அவரது ஒரிஜினல் போட்டோவா அல்லது ஏஐ போட்டோவா என்று ஆச்சரியப்படுகின்றனர்.