Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மீண்டும் கவர்ச்சிக்கு தயாராகும் சமந்தா

பி.சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ என்ற பான் இந்தியா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ என்ற ஒரு பாடல் காட்சியில், படுகவர்ச்சியாக நடனமாடி இருந்தார் சமந்தா. இப்பாடலை இன்றளவும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஹீரோயினாக மட்டும் நடித்து வந்த சமந்தா, முதல்முறையாக இப்பாடலுக்கு கவர்ச்சியான நடனமாடியது பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில், மீண்டும் சமந்தா கவர்ச்சி நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண், சிவராஜ்குமார், ஜான்வி கபூர் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகும் ‘பெத்தி’ என்ற படத்தில், ஒரு பாடல் காட்சியில் மட்டும் சமந்தா நடனமாடுவதாக சொல்லப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு சிறப்பு பாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அப்பாடல் காட்சிக்கு ராம் சரணுடன் இணைந்து சமந்தா நடனமாட இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால், ‘பெத்தி’ படத்தை பற்றிய பரபரப்பு அதிகரித்துள்ளது. 2018ல் வெளியான ‘ரங்கஸ்தலம்’ என்ற தெலுங்கு படத்தில் ராம் சரண் ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அதற்கு பிறகு 7 வருடங்கள் கழித்து அவர்கள் மீண்டும் இணையும் படமாக ‘பெத்தி’ அமைந்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் முடிவு தெரியும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி திரைக்கு வருகிறது.