மும்பை: முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, இந்தியில் ‘தி பேமிலிமேன் சீசன் 2’, ‘சிட்டாடெல்: ஹனி பன்னி’ ஆகிய வெப்தொடர்களில் நடித்தார். தற்போது ‘ரக்த் பிரம்மாண்ட்: தி ப்ளடி கிங்டம்’ என்ற இந்தி வெப்தொடரில் நடித்து வருகிறார். இத்தொடர்களை இயக்கிய ராஜ் நிடிமோருவும், சமந்தாவும் மிகத்தீவிரமாக காதலித்து வருகின்றனர். வெகுவிரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்வார் கள் என்று கூறப்படுகிறது.
நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு ஐதராபாத், மும்பை என்று மாறி, மாறி வசித்து வந்த சமந்தா, தற்போது மும்பையில் தனியாக குடியேறியுள்ளார். ஐதராபாத்தில் பண்ணை வீடு வைத்திருக்கும் அவர், மும்பை வீட்டின் சில போட்டோக்களை வெளியிட்டு, ‘புதிய தொடக்கம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு நெட்டிசன்களும், ரசிகர்களும் மனதார வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.