தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கம் சென்று பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. நடிப்பை தாண்டி பட தயாரிப்பு மற்றும் பல தொழில்களில் முதலீடு செய்து வைத்துள்ளார். இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் சமந்தா காதலில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவ்வப்போது இருவரும் இணைந்து அவுட்டிங் செல்லும் போட்டோக்களை வெளியிட்டு அத்தகவலை உறுதி செய்து வருகின்றனர். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சொல்லப்படுகிறது. மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வரும் சமந்தா, அதற்கான சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் சமந்தா ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் போட்டோ அல்லது வீடியோவை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் தனது ஜிம் கோச்சுடன் சேர்ந்து முரட்டுத்தனமாக உடற்பயிற்சி செய்த போட்டோவை பகிர்ந்திருந்தார். இதற்கு சில நெட்டிசன்கள், சமந்தாவை கலாய்க்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதில் ஒரு ரசிகர், ”இப்படி உடல் மெலிந்து போகும் அளவுக்கு ஒருவர் உடற்பயிற்சி செய்ய கூடாது” என்று கமெண்ட் பதிவிட்டிருந்தார். இதற்கு சமந்தா, ”எப்போதாவது உங்கள் அறிவுரை எனக்கு தேவைப்பட்டால் நான் கேட்கிறேன். இப்போது வேண்டாம்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
