தற்போது இந்தி வெப்தொடர் ஒன்றிலும், ‘பங்காரம்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வரும் சமந்தா, ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் ‘சுபம்’ என்ற தெலுங்கு படத்தை தயாரித்து, கடந்த மே மாதம் ரிலீஸ் செய்தார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘இனிமேல் எனக்கு அதிக ஆர்வம் இருக்கும் விஷயங்களில் மட்டுமே கவனம்...
தற்போது இந்தி வெப்தொடர் ஒன்றிலும், ‘பங்காரம்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வரும் சமந்தா, ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் ‘சுபம்’ என்ற தெலுங்கு படத்தை தயாரித்து, கடந்த மே மாதம் ரிலீஸ் செய்தார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘இனிமேல் எனக்கு அதிக ஆர்வம் இருக்கும் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். இதில் உடற்பயிற்சியும், திரைப்படங்களும் அடங்கும். இப்போது நான் நடிக்கும் வெப்சீரிஸ் மற்றும் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது இல்லை. இனிமேல் நான் செய்யும் ஒவ்வொரு விஷயமும், அதாவது, நான் தயாரிக்கும் திரைப்படங்கள் தொடங்கி, நான் முதலீடு செய்யும் பிசினஸ் வரை, அனைத்து விஷயத்திலும் நான் முழு மனதுடன் ஈடுபட திட்டமிட்டுள்ளேன்.
இனிமேல் ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடிக்க மாட்டேன். இப்போது என் உடல்நிலை குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டும். சற்று தாமதமாக அதுபற்றி உணர்ந்ததால்தான், எனது அடுத்தடுத்த வேலையை குறைத்துக்கொள்ள விரும்புகிறேன். திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்தாலும், அதன் தரம் கண்டிப்பாக அதிகரிக்கும்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, ‘சமந்தா திரையுலகை விட்டு ஒதுங்குகிறார்’ என்று தகவல் வெளியானது. ‘அது பொய்’ என்று சமந்தா கூறியுள்ளார்.